அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (ஆகஸ்ட் 25) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எழுத்து மூலமாக வழங்கப்பட்ட உறுதியை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் இடமாற்றம் உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து, காலை 8 மணி முதல் நாடு முழுவதும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட GMOA திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


