Friday, December 5, 2025

இன்று நண்பகல் 12.10 மணிக்கு சூரியன் உச்சம்!

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி முதல் செப்டம்பர் 7-ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, இன்று (01) நண்பகல் 12.10 அளவில் முதலைப்பாலை, பலகொல்லாகம, ராஜாங்கனை, எப்பாவல, மெதிரிகிரிய, பள்ளித்திடல் மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

The Department of Meteorology forecasts rain for several areas in Sri Lanka, including the Sabaragamuwa province and the Kandy and Nuwara Eliya districts. The Western and Northwestern provinces, along with the Galle and Matara districts, may experience light rain. Thunderstorms are expected in the Uva province and the Ampara and Batticaloa districts after 2 PM. Additionally, strong winds are predicted for the western slopes of the central hills and other regions. The sun will be directly overhead in specific locations, including Muthalaipalai and Vakarai, at noon today.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img