புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் இருப்பதாகக் கூறி அவர்களுக்கு நீண்டநேரமாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு வயோதிபர்களையும், வீதியில் சென்ற ஒரு பெண்ணையும் குளவிகள் கொட்டியதால் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர நோயாளிகளுக்காவது உடனடியாக சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.


