அநுராதபுரத்தில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆசிரியர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
திரப்பனே, அத்துன்பத்தனைச் சேர்ந்த இந்த ஆசிரியர், மாணவியின் பெற்றோர்கள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்துக் கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம் பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிமன்று, அவரைச் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
An Anuradhapura court has ordered the remand of a teacher until September 8th on allegations of sexually abusing a 12-year-old student at a leading school in Anuradhapura. The teacher was arrested after the student’s parents filed a complaint with the Ministry of Child and Women’s Affairs. The alleged incident took place in a school laboratory. The court issued the remand order after considering the arguments presented on behalf of the suspect.


