மாத்தறை கடற்கரையில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தில் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமுமின்றி தப்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ஒரு துப்பாக்கி, நான்கு ரவைகள், மற்றும் பயன்படுத்தப்பட்ட ஒரு ரவையையும் சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் சூடு நடத்திய நபரின் அடையாளம் ஆகியவை இதுவரை வெளியாகவில்லை. மாத்தறைப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


