யாழ். தாவடிப் பகுதியில், 400 போதை மாத்திரைகளை வைத்திருந்த 21 வயது இளைஞன் ஒருவரை திங்கட்கிழமை (25) பொலிசார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடிச் சந்தியில் வைத்து இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகள் நிறைவடைந்ததும், அந்த இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


