வடக்கு மாகாணம் முழுவதும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், ‘லஞ்சீட்’ (Lunch Sheet) பாவனைக்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்குப் பதிலாக, உணவுகளைப் பொதி செய்வதற்குச் சூழலுக்கு உகந்த மாற்றாக வாழை இலையைப் பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வாழை இலையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உடன் நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ‘ஒருவழிப் பாதைகளை’ அறிமுகப்படுத்தல், அத்துடன் கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகிய நடவடிக்கைகளைச் செயற்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்குத் தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் இந்தக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.
The Northern Province has decided to enforce a complete ban on the use of ‘Lunch Sheets’ (plastic food wraps) across the entire province, effective January 1, 2026. This decision, made during a meeting chaired by Northern Province Governor N. Vethanayagan, aims to promote the use of environmentally friendly alternatives such as banana leaves. The Governor also directed local government bodies yet to approve the ban to do so immediately. Additionally, measures such as introducing one-way streets to control traffic congestion, implementing time restrictions for heavy vehicles, and removing illegal constructions obstructing stormwater drainage before the upcoming rainy season were mandated.


