உலகச் சந்தையில் தங்கத்தின் விலை, வரலாற்றிலேயே முதன்முறையாக, 3,950 அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என்று சர்வதேசச் சந்தை குறித்த தரவுகள் அறிவிக்கின்றன.

அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம் நாட்டில் தங்கத்தின் விலையில் 8,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரங்களைக் கீழ் காணலாம்:
22 கரட் பவுண் தங்கத்தின் விலை தற்போது 290,500 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இது 283,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், கடந்த வாரம் 306,000 ரூபாயாக இருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
The price of gold has reached a historic high in the global market, surpassing $3,950 per ounce for the first time, as per international market data. Consequently, the local price of gold has increased by 8,000 rupees compared to the previous week, with 22-karat gold now selling for 290,500 rupees per sovereign and 24-karat gold rising to 314,000 rupees.


