வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் இலங்கையர்களுக்குப் பொலிஸார் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள், வாடகை வாகனம் (Rent a Car) பெறும் விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வரும்போது, ‘ஒன்லைன்’ (Online) முறையின் மூலம் தற்காலிகமாக ஒரு காரை வாடகைக்கு எடுக்கும்போது முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரை உறுதிசெய்த பின்னரே, அதற்கான பணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண மோசடி கும்பல்
காரை வாடகைக்குக் கொடுப்பதாகக் கூறி, காரை வழங்காமல், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி எண்களைச் செயலிழக்கச் செய்து, மோசடியாகப் பணம் பெறும் ஒரு குழு தற்போது செயற்படுவதாகப் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக் கும்பல் தொடர்பாகத் தற்போது அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் இந்த விடயத்தில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The Sri Lanka Police have issued a warning to Sri Lankans returning from abroad regarding online rental car scams. People are advised to exercise caution and conduct proper investigations before making any payments when temporarily renting a car online. The police have received numerous complaints about a fraudulent group operating by taking money for car rentals, then deactivating the contact numbers without providing the vehicle.


