இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயலிழப்பினால் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ் வழங்கும் முறைமை, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை (மேல் மாகாணம் தவிர்ந்த), பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, ஓய்வூதியக் கட்டமைப்பு மற்றும் பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இணையவழி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்கள் இந்தச் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, பதிவாளர் நாயகம் திணைக்களம் பாதிக்கப்பட்டோர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் இருந்து தகவல் முறைமைகளின் உதவியின்றி (Manually) சான்றிதழ் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
ICTA இந்தச் சிரமத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளதுடன், LGC சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர உயர் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற மட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய LGC விரிவாக்கத்தின் அடுத்த கட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
Due to a failure in the Lanka Government Cloud (LGC) service, several online services provided by multiple government institutions have been temporarily affected, including the issuance of birth, marriage, and death certificates, online revenue license renewal (eRL 2.0), Police Clearance Certificates, and many ministry websites. The Information and Communication Technology Agency (ICTA) is working intensively to restore the services and has advised the public that affected certificates can be obtained manually from relevant Divisional Secretariats; ICTA has prioritized service restoration and intends to implement the next phase of LGC expansion to prevent future capacity issues.