சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி ஒருவரால் நிகழ்ந்துள்ளது. அவர் தனது 46 வயதான மகனுக்கு உயிரைக் காக்கும் வகையில் தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார்.
அறுவை சிகிச்சை
சிறுநீரகச் செயலிழப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட அந்த ஆண், கடந்த இரு வருடங்களாகக் கூழ்மப்பிரிப்பு (Dialysis) சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார்.
எனினும், அவரது உடல் நலனில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்க அவரது தாயார் தானாக முன்வந்துள்ளார்.
தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, தாயும் மகனும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
A heartwarming incident has been reported in Indore, Madhya Pradesh, India, where a 72-year-old mother donated one of her kidneys to save her 46-year-old son, who had been suffering from kidney failure and undergoing dialysis for two years with no improvement. The kidney transplant surgery was successful, and both the mother and son are currently reported to be recovering well.