Wednesday, November 12, 2025

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் முத்து நகர் பகுதியில் நேற்று  (11) இடம்பெற்றுள்ளது. குழந்தை பிறந்து 42 நாட்களே ஆன நிலையில், இரவில் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாய் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். நேற்று  (11) அதிகாலை அவர் சிசுவைப் பார்த்தபோது, அது உயிரிழந்த நிலையில் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சிசுவுக்கு எக்கோ பரிசோதனை

உயிரிழந்த சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய பெற்றோர் முற்பட்டபோது, அதனைக் கைப்பற்றிய சீனக்குடா பொலிஸார், சிசுவின் உடலைத் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின்போது, சிசுவை எக்கோ பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் தமக்குக் கூறியிருந்ததாகப் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தாம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகச் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

The China Bay Police have initiated an investigation into the mysterious death of a 42-day-old infant in Muthunagar, Trincomalee, which occurred on the 11th. Initial inquiries suggest the mother found the child deceased in the bedroom early that morning after feeding it the night before. Although the parents attempted to bury the body, the police intervened and sent the remains to the Trincomalee General Hospital for a medical expert’s report. The parents informed the police that doctors had previously advised them to bring the infant for an echo scan on the 13th. The China Bay Police confirmed they are continuing with their inquiries into the cause of death.

download mobile app

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

Topics

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் புதிய கொள்வனவு விலை அறிவிப்பு!

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img