Friday, November 14, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு!

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவி வரும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Lightning Storm With Rain

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின்னராக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The Department of Meteorology has forecasted the development of a disturbed weather condition in the lower atmosphere to the east of Sri Lanka, which is expected to intensify the current rainy weather, especially in the Northern and Eastern provinces. Intermittent rain is likely in the Northern, North Central, Eastern, and Uva provinces, and Hambantota district, while other areas may experience rain or thundershowers after 1:00 PM. Moderate to heavy rainfall (over 75 mm) is anticipated in some places in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva provinces, and Ampara and Batticaloa districts. Additionally, misty conditions are expected in several provinces during the early morning, and the public is advised to take precautions against lightning and temporary strong winds during thundershowers.

Hot this week

கிளிநொச்சி பஸ் நிலையத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண்...

குற்றப்புலனாய்வில் போதைப்பொருள் கைப்பு!

குருநாகல் குளியாப்பிட்டிய - வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்...

யாழில் வாளுடன் சண்டித்த இளைஞன்; பின்னணி அதிர்ச்சி!

போதைப்பொருளை மீட்கச் சென்ற பொலிஸாரை வாளினைக் காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக...

மணமேடையில் மணமகனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்; ட்ரோன் கெமரா பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர்...

சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள...

Topics

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது...

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img