Friday, November 14, 2025

யாழில் வாளுடன் சண்டித்த இளைஞன்; பின்னணி அதிர்ச்சி!

போதைப்பொருளை மீட்கச் சென்ற பொலிஸாரை வாளினைக் காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரிப் பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து சோதனையிட்டபோது, அந்த இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டிருந்தனர்.

25க்கும் மேற்பட்ட வழக்குகள்

குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாவற்குழிப் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக அவர் பொலிஸாருக்குத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனைக் கைது செய்யும் நோக்குடன், நாவற்குழியில் உள்ள அவனது வீட்டிற்குப் பொலிஸார் சென்ற வேளையில், அவன் அங்கிருந்த வாளைக் காட்டிப் பொலிஸாரை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டான். எனினும், அந்த இளைஞனைப் பொலிஸார் சமயோசிதமாக மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவனிடமிருந்தும் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டனர்.

மேலதிக விசாரணைகளின்போது, யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரைப் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Police have reported that an individual arrested in Navatkuli for threatening police officers with a sword during a drug raid has over 25 pending court cases in Jaffna Magistrate’s Courts. The arrest was made after an initial suspect, arrested with heroin in Chavakachcheri, led police to the second suspect’s home. When police attempted to apprehend him, he brandished a sword and tried to escape, but was overpowered and arrested. Police subsequently recovered heroin from the second suspect, who is currently being held under police custody for further investigation.

download mobile app

Hot this week

கிளிநொச்சி பஸ் நிலையத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண்...

குற்றப்புலனாய்வில் போதைப்பொருள் கைப்பு!

குருநாகல் குளியாப்பிட்டிய - வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்...

மணமேடையில் மணமகனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்; ட்ரோன் கெமரா பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர்...

சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள...

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில்...

Topics

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது...

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு,...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் 2 பேர் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img