Sunday, December 22, 2024

நாமலின் கல்வி தகைமை குறித்து சிக்கல்: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி காமந்ர துஷாரவினால் இன்று (16.12.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜமுனி காமந்ர தெரிவித்ததாவது, பரீட்சை நாளன்று நாமல் ராஜபக்ச பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த இளைஞர் முறைப்பாட்டை அப்போதைய மண்டபத் தலைவர், சட்டக்கல்லூரி அதிபர், மற்றும் பதிவாளர் ஆகிய பொறுப்பதிகாரர்களிடம் பதிவு செய்துள்ளார். முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதன் பின்னர், நீதியமைச்சின் அப்போதைய செயலாளர் சுஹத கம்லத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அது மறுக்கப்பட்டது. மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் முறையிட்டபோதும், தீர்வு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், முறைப்பாட்டை பதிவு செய்த இளைஞர் தனது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியதால், உரிய சாட்சியங்களைப் பெற்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுத்து, முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஜமுனி காமந்ர வலியுறுத்தியுள்ளார்.

Hot this week

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று, இயந்திர கோளாறினால் இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள்...

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற அமரன் மற்றும் மகாராஜா படங்கள்.. முழு விவரம்”

மிழ் சினிமாவில் இந்த வருடம் பல வெற்றிப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன....

“முதல் நாள் விடுதலை 2 படத்தின் முதற்கட்ட வசூல்.. எவ்வளவு?”

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2023ஆம் ஆண்டு...

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கு எதிரான கொழும்பில் போராட்டம்

இமாலயப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இன்றைய...

நாட்டில் அரிசி பற்றாக்குறை மீண்டும் ஏற்படல்

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய...

Topics

அநுரவின் சந்திப்பில் மறைக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே...

ஹோட்டல் குழப்பத்தில் துப்பாக்கி பிரயோக செய்த அதிகாரி

களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் குழுவிற்கும்...

கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதை தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img