இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பணியாற்றி வந்த 116 அதிகாரிகள் தங்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நிர்வாக அதிகாரிகள், பிரதான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்பட 60 பேருக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பது கவலையளிக்கக் கூடியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்து தெரிவித்துள்ளார்.