கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை கூடியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதுவரை இத்தகைய பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை உருவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 நவம்பர் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ரொறன்ரோவில் சுமார் 3,80,000 பேர் வேலை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கின்படி, நகரின் வேலையற்றோர் வீதம் 8.1% ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த 2022 ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.