இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.
இதனால், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் புதிய விலை 800 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இன்று ஏற்பட்ட தேங்காய் விலை உயர்வே இதற்குக் காரணமாகும். தேங்காய் விலை அதிகரிப்பு உள்ளூரில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 150 முதல் 200 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படுகிறது.
சந்தையில் தேங்காய்களை கொள்வனவு செய்து எண்ணெய் எடுப்பதன் மூலம் இலாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.