இலங்கையில் தேங்காயின் சராசரி விலை 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவுகளின்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை தற்போது ரூ. 138,582 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறித்த தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை, உள்நாட்டுச் சந்தையில், பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை ரூ. 180 முதல் 190 வரையிலும், சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை ரூ. 150 முதல் 170 வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The average price of coconuts in Sri Lanka has increased by 6.8 percent, with the average price for a thousand coconuts now recorded at Rs. 138,582, according to data from the Coconut Development Authority. Meanwhile, the wholesale price in the domestic market ranges from Rs. 180 to Rs. 190 for a large coconut and Rs. 150 to Rs. 170 for a small coconut.


