இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் (12-12-2024) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய நாளில் பங்குகளின் விலைச் சுட்டெண் 150.72 புள்ளிகள் அதிகரித்ததுடன், அதன் முடிவில் 14,035.81 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், S&P SL20 சுட்டெண் 42.80 புள்ளிகள் அதிகரித்து 4,186.09 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தக நாளின் முடிவில் பங்குச் சந்தையின் மொத்த பரிவர்த்தனை 7.35 பில்லியன் ரூபாயாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.