கொழும்பு வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் மற்றும் போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தெஹிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் முதலில் கைது செய்யப்பட்டார். சோதனையின் போது 19 இலட்சம் ரூபா பணம், போதைப்பொருள், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் மின்னணு தராசு போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 24 வயதான மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் வெள்ளவத்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.