நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தன்னுடைய பங்களிப்பைச் செய்ய உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சம்பா மற்றும் கீரி சம்பா தவிர மற்ற அரிசி வகைகளில் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
அதேவேளை, அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் மீண்டும் நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.