கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததின் பின்னர், மக்கள் முன்னைய அரசாங்கங்களில் இடம்பெற்ற பெரும் முறைகேடுகளை வெளிச்சமிட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என நம்பினர்.
ஆனால், இதுவரை எந்த முக்கிய குற்றவாளிகளின் தகவலும் வெளியிடப்படவில்லை எனவும், குறிப்பாக, அரிசி மாபியாவை எதிர்கொள்ள ஜனாதிபதி தனது பேச்சுக்களாலும் செயற்பாடுகளாலும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இச்சூழ்நிலையை மக்கள் ஆவலுடன் கவனித்து வருவதாக ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.