இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிலியந்தலைப் பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, சந்தேக நபர்களிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பலின் பின்னணி மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிள் திருத்துபவர்கள் என்றும், இருவர் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள், கொள்ளை நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் மோட்டார் சைக்கிள் கொள்ளைக் கும்பலை, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவச் சிப்பாயான ‘களுத்துறை பொம்புல புஸ்கொட்டா’ என்ற நபர் வழிநடத்துவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Police have arrested a large-scale motorcycle theft gang in Sri Lanka, consisting of 11 individuals, including two women. The Piliyandala Police seized motorcycles valued at Rs. 5 million from the suspects. Among the arrested were two motorcycle mechanics and two dealers. Authorities also recovered stolen motorcycle parts, a three-wheeler used for the robberies, and a quantity of Ice drug (crystal methamphetamine). Police identified the gang’s leader as a former soldier named ‘Kalutara Bombula Puskotta,’ who is linked to various criminal activities.


