சமீப கால சீரற்ற வானிலை காரணமாக கண்டி, பதுளை, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் இது இன்று (15-12-2024) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.
பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம மற்றும் மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேசங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.