இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் மீண்டும் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஒரு 2000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டது. ஆனால், அது புழக்கத்தில் பெரிதாக இல்லாமல் போனது.
அதற்குக் காரணம், அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விடப் பெரிதாக இருந்ததுதான்.
இந்த முறை புதியதாக வெளியிடப்பட்ட 2000 ரூபா தாள்கள், தற்போது புழக்கத்தில் உள்ள 1000 மற்றும் 5000 ரூபா தாள்களின் அளவிலேயே காணப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ரூ. 2000 நினைவு நாணயத் தாளை (Commemorative Currency Note) ஆகஸ்ட் 29, 2025 அன்று புழக்கத்தில் விட்டுள்ளது.
The Central Bank of Sri Lanka (CBSL) has released new Rs. 2,000 currency notes for public circulation, which are reportedly the same size as the existing Rs. 1,000 and Rs. 5,000 notes. A previous Rs. 2,000 note issued in 2021 was not widely used because it was larger than standard notes. The new note was released on August 29, 2025, to commemorate the CBSL’s 75th Anniversary.


