2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் (Re-scrutiny Results) தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்ப இறுதித் தேதி
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி தினம் இன்று (ஒக்டோபர் 09) நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


