பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனோ தீவில், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு, இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிண்டனோ தீவிலுள்ள மெனே நகருக்கு அருகில் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரிக்டர் அளவில் 7.4 எனப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.

இதன் விளைவாக, அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
A powerful 7.4-magnitude earthquake struck off the coast of Mindanao Island in the Philippines at 9:43 AM local time today, centered 10 kilometers deep near the town of Mene. The strong tremor caused buildings to shake, leading frightened residents to rush into the streets, and a tsunami warning has been issued, with waves potentially reaching up to 10 feet; however, no information on casualties is available yet.


