Wednesday, November 12, 2025

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சிசிடிவி கெமராவின் ஊடாக கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டிக்காக மாத்தளைப் பிரதேசத்தில் இருந்து சென்ற அணியினர் தமது கையடக்கத் தொலைபேசிகளை ஒரு பையில் இட்டு, தாம் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் வைத்துள்ளனர்.

போட்டி முடிந்து அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தபோது, கையடக்கத் தொலைபேசி வைக்கப்பட்டிருந்த பை அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட பையில் 8 தொலைபேசிகள் இருந்ததாகவும், அவற்றின் மொத்தப் பெறுமதி 5 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.

பின்னர், அவர்கள் இது குறித்து அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததன் அடிப்படையில், பொலிஸார் சிசிடிவி காட்சிகளைப் பரிசீலனை செய்துள்ளனர்.

அதன்படி, ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு விசாரித்ததில், அவர் அதில் இருந்த இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை 8,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரிடம் தொடர்ந்த விசாரணைகளுக்கமைய, அவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மூவருமாக அந்தப் பணத்தைக் கொண்டு ஹெரோயின் போதைப்பொருளைக் கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Three suspects were identified through CCTV footage and arrested for stealing eight mobile phones worth Rs. 585,000 from a cricket team from Matale who had placed their phones in a bag inside a three-wheeler during a match in Akurana today. Following a complaint to the Alawathugoda Police, investigations revealed that one suspect had sold two phones worth Rs. 200,000 for just Rs. 8,000. Further questioning uncovered that all three suspects used the money from the sale to purchase heroin; the three individuals have been arrested and are facing further investigation.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img