தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பால் காலமானார். இவர், பெரியாரின் பேரன் மற்றும் சம்பத்தின் மகனாக அறியப்பட்டார். 2001ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற இளங்கோவன், திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு எதிரான சர்ச்சை கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவரின் கருத்துக்களில் மிக முக்கியமான ஒன்று, இலங்கையின் இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் மரணத்திற்கு பிறகு, பாலச்சந்திரனின் மரணம் அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதை கொண்டாட வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இளங்கோவனின் மறைவுக்கு பிறகு, சிலர் பட்டாசு கொளுத்தி அதை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.