மூன்றரை இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒருவர் இலஞ்சம் தொடர்பான முறைப்பாட்டை ஆணைக்குழுவிற்கு வழங்கியதின் பேரில் இந்த பெண் கைதாகியுள்ளார். விசாரணையின் போது, சந்தேக நபர் கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்டார்.
கண்டி, தலாத்துஓயா பிரதேசத்தை சேர்ந்த பெண் விவசாயத்துக்கான காணி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இடைத்தரகராக கையாள்வதற்காக, காணி சீர்திருத்த ஆணைக்குழுவினருடன் செயல்பட்டு, முறைப்பாட்டாளரிடமிருந்து மூன்றரை இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.