தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல் அடிப்படையில் பொலிஸார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
குழந்தை துணியில் கட்டப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்தது. பின், குழந்தையை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் அந்த குழந்தையை அந்த இடத்தில் விட்டுச் செல்வதை சிசிடிவி கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையாக இருக்கின்றது.