இமாலயப் பிரகடனத்துடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இன்றைய (20.12.2024) இமாலயப் பிரகடனத்தின் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு ‘BMICH’ மண்டபத்தில் நடைபெற்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் மண்டபத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில், இமாலயப் பிரகடனத்துக்கும், அதில் பங்கேற்ற பௌத்த தேரர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது