வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர் வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, நாய் காப்பகம் நடத்தி வருபவர், இன்று (20) முறைப்பாடு செய்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பணிப்பாளர் முறைப்பாடு செய்தவரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.