இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாகச் சரிந்து வருகிறது.
அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை
உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது.
எனினும், நேற்று (அக்டோபர் 23), செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.
அதற்கமைய, நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
Market sources indicate a sharp drop in the price of gold in Sri Lanka, with the price having fallen by Rs. 77,000 in one week, following a continuous rise over the previous weeks. Last week, the price of 24-karat gold reached a record high of Rs. 410,000 in the local market. However, as of yesterday (the 23rd), the price for 24-karat gold in the Chettiar Street gold market was recorded at Rs. 330,000, and 22-karat gold at Rs. 302,300, with a further reduction of Rs. 10,000 recorded just yesterday.


