நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், டிப்பர் லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், வரக்காபொல, மஹேனகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் எனத் தெரியவந்துள்ளது. அவரது சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லொறியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________
A Police Constable, aged 33 and hailing from Warakapola, has died in an accident after a tipper truck travelling from Colombo to Kandy collided with his motorcycle near the Nambuluwa Junction on the Colombo-Kandy main road. The seriously injured motorcycle rider was admitted to Wathupitiwala Hospital but succumbed to his injuries. The tipper lorry driver has been arrested, and Nittambuwa Police are conducting further investigations.


