மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்தது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடுகண்ணாவையிலும் ரயில் மோதி உயிரிழப்பு
இதேவேளை, கண்டியில் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகிலும் மற்றொரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, கனத்தொட்டைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடுகண்ணாவைப் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Two separate fatalities were reported yesterday after individuals were struck by trains in different parts of the country. A 32-year-old resident of Puthukudiyiruppu, Mannar, died after being hit by a train traveling from Talaimannar to Colombo Fort. Separately, a 27-year-old man from Ganathotta, Akuressa, was killed after being hit by a train near the Kadugannawa railway station in Kandy. Police are investigating both incidents.


