மகனின் மர்மமான மரணத்துக்கு பழி வாங்க, தந்தை 200 பேரை கொன்று குவித்த சம்பவம் ஹைதி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதியில் வசிக்கும் ஒரு கேங்ஸ்டரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்ததற்கான காரணம் அறிய வூடு மந்திரவாதியிடம் சென்ற அவர், மகனின் மரணத்திற்கு மாந்திரீக நம்பிக்கையுடன் சில வயதானவர்கள் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேங்ஸ்டர், ஊரின் மந்திரவாதிகள் என கருதப்பட்ட 200 பேரை, பெரும்பாலும் 60-80 வயதுடையவர்களை, கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் ஹைதியில் கலவரத்தை ஏற்படுத்தியதுடன், மூடநம்பிக்கைகளால் இந்த ஆண்டு மட்டும் 5000 பேர் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சித் தரவுகளையும் வெளிப்படுத்துகிறது. சட்டத்தின் பலவீனம் மற்றும் கேங்ஸ்டர்களின் ஆதிக்கம் இந்த நாட்டு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது