ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் (22) தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரெனக் காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
A 42-year-old father of one, identified as Sivapalasingam Kantharoopan from Kaithadi Maththi, Kaithadi, Jaffna, died yesterday (the 22nd) after experiencing a day of fever and diarrhoea. He initially sought treatment at the Putthur Hospital and returned home, but he later died while sitting in a chair. The inquest, conducted by Sudden Death Inquiry Officer A. Jeyapalasingam, revealed that the cause of death was a Pneumonia infection.