வவுனியாவில் இன்று (01.09.2025) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயில், வவுனியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மன்னார் வீதியில் உள்ள ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பற்றா வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பற்றா வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் நான்கு வயதுக் குழந்தை ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்களின் வாகனம் கடும் சேதமடைந்துள்ளது. ரயில் சமிஞ்சையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக, ரயில் கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரமும் பணியில் இருப்பார். ரயில் கடந்து செல்லும் போது மூடப்படும் பாதுகாப்பு கதவு, இன்று மூடப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தினால், ரயில் அரை மணி நேரம் தாமதமாகவே தனது பயணத்தைத் தொடங்கியது. சம்பவம் குறித்து வவுனியாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A train accident in Vavuniya today injured three people, including a four-year-old child, who were all traveling in a pickup truck. The train, which was traveling from Colombo to Jaffna, collided with the truck at a railway crossing. The accident is believed to have been caused by a signal malfunction, as the safety gate at the crossing, which is normally manned by a 24-hour employee, was not closed. Police are investigating the incident.