நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகள் மூலம் 211 மில்லியன் ரூபா அபராதத்தை ஈட்டியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 14,682 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் அரிசிச் சந்தையில் மட்டும் 2,800 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகள் இதில் அடங்கும். அரிசி தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளன.
அதிக விலைக்கு அரிசி விற்பது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தக் குற்றத்தில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 500,000 ரூபாய் அபராதமும், அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
அனைத்து அரிசி வர்த்தகர்களும் சட்டத்திற்கு இணங்கி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் பேணுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.
The Consumer Affairs Authority has collected 211 million rupees in fines from January to August 2025 through legal cases filed in magistrate courts. A total of 14,682 raids were conducted nationwide. Out of these, 2,800 raids targeted the rice market, with 915 specifically addressing the issue of selling rice at inflated prices. The courts have imposed 95 million rupees in fines in connection with these rice-related cases. The authority has warned that selling rice above the gazetted price is a serious offense, punishable by fines or even imprisonment. The Consumer Affairs Authority urges all rice traders to adhere to the law and maintain the government-stipulated prices.