அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது அனைத்துப் பயணிகளும் இன்று முதல் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விதிமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு, அதை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The National Road Safety Commission has announced that wearing a seat belt is now mandatory for all passengers travelling on expressways in Sri Lanka. Those who violate this new rule will face legal action, though a grace period of three months has been given to vehicles that do not currently have seat belts installed.