அன்னாசிப் பூன்னா அது பிரியாணி, நெய் சோறுன்னு சமையல்ல மட்டும்தானே பயன்படுத்துவோம்னு நீங்க கேட்கலாம். ஆனா அது தலைமுடி வளர்ச்சிக்கும் ரொம்ப உதவும். அதுமட்டுமில்லாம, உங்களுக்கு நீண்ட நாளா பொடுகுப் பிரச்னை இருந்தாலும் அதையும் இந்த அன்னாசிப் பூ குறைக்கும். அப்படிப்பட்ட அன்னாசிப் பூவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்னு பார்க்கலாம், வாங்க.
நம்ம வீடுகள்ல பயன்படுத்துற கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்ற மசாலாப் பொருட்கள்ல நம்ம அதிகமா பயன்படுத்தாத, கவனிக்காத ஒரு மசாலாப் பொருள் இந்த அன்னாசிப் பூ. அன்னாசிப் பூவுல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமா இருக்கு. இதைக் கஷாயம் அல்லது டீ மாதிரி செஞ்சு குடிச்சா உடல் ஆரோக்கியத்துல நிறைய நல்ல மாற்றங்களை நம்மளால பார்க்க முடியும். அதே மாதிரி, தலைமுடி வளர்ச்சி மற்றும் பொடுகுப் பிரச்னைகளிலும் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.