அம்பாந்தோட்டை, பெலியத்தை பகுதியில் நேற்று (26) குடும்பத் தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பெலியத்தை போலீசார் தெரிவித்தனர்.
பெலியத்தை, நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் உறவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கத்தியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெலியத்தை போலீசார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


