முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். சடலத்தைப் பார்வையிட வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர், குரவில் உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A man was found dead, hanging from a mango tree, within the premises of the Viswamadu Manikappillaiyar temple in the Pudukudiyiruppu police division of Mullaitivu. Police, who were alerted by the public, retrieved the body and are conducting an investigation. The deceased was identified as Kandasamy Tharshan from Kuravil Udaiyarkattu. The Mullaitivu District Magistrate, Dharmalingam Pratheepan, ordered an autopsy before the body is handed over to the relatives. Police are investigating whether the death was a suicide or due to other causes.