வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூம்.
அதேபோல், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆபத்துகளைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
The Department of Meteorology has forecast rain in several parts of Sri Lanka, including the Western, Sabaragamuwa, Southern, and Central provinces. The report also mentions the possibility of light rain in the Northern and North-Western provinces, as well as rain or thunderstorms in the Uva province and Batticaloa and Ampara districts after 2 PM. Additionally, it warns of strong winds and advises the public to take precautions against potential risks from thunderstorms and lightning.