மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இன்று (5) சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளது. அதன்படி, இன்று (5) நண்பகல் 12.09 மணியளவில் நல்லுருவ, பலாங்கொடை, ரத்மலவின்ன, புதுருவகல மற்றும் பானம ஆகிய பகுதிகளுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
The Department of Meteorology has forecast light rain for the Western and Sabaragamuwa provinces, as well as the Galle, Matara, Kandy, Nuwara Eliya, and Jaffna districts today (5). Thundershowers are expected in the Uva province and the Ampara, Batticaloa, and Mullaitivu districts after 2 PM, while other areas will experience dry weather. Additionally, strong winds of 30-40 km/h are predicted for the western slopes of the central hills, North Central, and Northwestern provinces, and the Hambantota district. The sun will be directly over areas like Nalluruwa and Balangoda at 12:09 PM today due to its southward movement.