இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
இதேபோல், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படும் பலத்த காற்று, மின்னல் போன்ற தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The Department of Meteorology has forecast heavy rains in the afternoon in many parts of the country. Intermittent rains are expected in the Western and Sabaragamuwa provinces and the districts of Galle, Matara, Kandy, and Nuwara Eliya. Strong winds are also expected in several areas. The public is advised to take precautionary measures against strong winds and lightning during thunderstorms.