இலங்கைக்குக் கடத்திச் செல்லவிருந்த சுமார் ஆறு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகளை இந்திய கடல்சார் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை வழியாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இலங்கைக்குக் கடத்தப்படுவதாக இந்தியக் கடல்சார் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வேம்பார் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விசாரணையில், இந்தச் சிகரெட் பைக்கட்டுகள் படகு மூலம் இலங்கைக்குக் கடத்திச் செல்லவிருந்தன என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த சிகரெட் பைக்கட்டுகளின் மதிப்பு சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபாய் என்று இந்தியக் கடல்சார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Indian marine police have seized foreign cigarette packets worth approximately six crore Indian rupees that were being smuggled to Sri Lanka. Acting on a tip-off, police intercepted a small lorry at a checkpoint near Vembar beach in the Thoothukudi district. They found 32 bundles of foreign cigarettes and arrested the 52-year-old driver. Investigations revealed that the cigarettes were intended to be transported to Sri Lanka by boat.