இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று (4) கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டில் நீண்ட காலமாகக் குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் நிலவி வந்தது. அந்தக் கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களே அண்மையில் கைது செய்யப்பட்டனர். ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு, சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். 159-வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும்” என்றார்.
Minister of Public Security and Parliamentary Affairs Ananda Wijepala announced that two Pakistani nationals were brought to Sri Lanka to operate an “Ice” drug production facility. Speaking at the opening of the new Cinnamon Gardens Police Station building, he stated that investigations into recently arrested drug offenders revealed a long-standing criminal culture and a network involving politicians. Wijepala emphasized that the government is taking strict legal action based on the information uncovered. He also added that facilities will be provided to the police to strengthen the rule of law in the country.